
ஈப்போ, நவ 1 – பேராவில் வெள்ளத்தினால் மேலும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். இன்று காலை 8 மணிவரை 94 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் கெரியான் மற்றும் ஹிலிர் பேராக் மாவட்டங்களில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கெரியானில் சங்காட் லோபாக் தேசிய பள்ளியில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் தங்கியுள்ளனர். அலோர் பொங்சு தேசிய தொடக்கப் பள்ளியில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், ஹிலிர் பேராக்கில் பாடாங் தெம்பாக் பலநோக்கு மண்டபத்தில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேரும் தங்கியுள்ளனர். இதனிடையே சங்கட் ஜாங்கில் சுங்கை பிடோர் ஆற்றில் நீர் மட்டம் குறைந்தாலும் தொடர்ந்து அபாயக் கட்டத்தில் இருப்பதாக வடிகால் நீர்ப்பாசனத்துறை அறிவித்துள்ளது.