
ஈப்போ , ஏப் 28 – பேரா ஊராட்சி மன்றத்தில் பேரா ம.இ.கா.வை பிரதிநிதித்து 14 பேர் பதவி ஏற்றனர். இதற்கு முன் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளில் ஊராட்சி மன்றங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டபோதிலும் ம.இ.கா. பிரதிநிதிகள் இடம் பொறாதது அக்கட்சியின் உறுப்பினர்களிடையே மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பேரா ம.இ.காவின் தலைவர் டத்தோ வி.இளங்கோ மந்திரிபுசார் சராணியிடம் பேச்சு நடத்தியதன் பலனாக ஊராட்சி மன்றத்தில் 14 இடங்கள் வழங்குவதற்கு அவர் முன்வந்தார்.
இதனைத் தொடர்ந்து ம.இ.கா பரிந்துரை செய்த 14 பேருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடமிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. அவர்களில் மஞ்சோங் ஊராட்சி மன்றத்தில் ம.இ.க.வை பிரதிநிதித்து அதன் தொகுதி செயலாளர் பெருமாள்சாமி நியமனம் செய்யப்பட்டார். தைப்பிங் ஊராட்சி மன்றத்தில் தைப்பிங் தொகுதி காங்கிரஸ் தலைவர் எம்.வீரன், கோலகங்சார் ஊராட்சி மன்றத்தில் கோலகங்சார் தொகுதி காங்கிரஸ் ஆர். ராமச்சந்திரன் சுங்கை சிப்புட் தொகுதி துணைத் தலைவர் அஜாட் கமால்டின் ஆகியோரும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் .