
ஈப்போ , செப் 26 – ஈப்போ கம்போங் சிமி தாமான் மிரிண்டியில் அமைந்துள்ள சுமார் 40 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு மகா துர்க்கை அம்மன் ஆலயத்தை உடைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் ஆறாம் தேதி நில அலுவலகம் ஆலய நிர்வாகத்தினருக்கு அனுப்பிய அறிக்கையில் ஆலயத்தை தற்போதுள்ள இடத்திலிருந்து 30 நாட்களுக்குள் அகற்றவேண்டும் என்றும் தவறினால் ஐந்து இலட்சம் வெள்ளி அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்பில் ஆலயத்தின் தலைவர் ரெங்கசாமி கிருஷ்ணன், அறங்காவலர் சுப்பிரமணியம் இராமையா, உறுப்பினர்கள் ஆர். இராஜமோகன், சு. சுரேஷ்ராஜ் ஆகியோர் பேரா மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து விளக்கத் அளித்தனர்.