
புத்ரா ஜெயா ஏப்ரல் 26- பேராக் மாநில கராத்தே டூ சங்கத்தின் புரவலராக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரை பேராக் மாநில கராத்தே சங்கத்தின் புரவலராக இவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பேரா கராத்தே டூ சங்கத்தின் தலைவர் மாஸ்டர் அனந்தன் தெரிவித்தார். பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் பேராக் மாநில கராத்தே சங்கத்திற்கு பெரும் அளவில் உதவிகளை புரிந்துள்ளார். பேராக் மாநில கராத்தே சங்கத்தின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய பங்காற்றி உள்ளார். அந்த வகையில் பேராக் மாநில கராத்தே சங்கத்தின் புரவலராக மனிதவள அமைச்சர் சிவகுமார் நியமிக்கப்பட்டிருப்பதாக மாஸ்டர் அனந்தன் தெரிவித்தார்.