Latestமலேசியா

பேரா, சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு வருகை

சுங்கை சிப்புட், ஜூன் 18 – சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு ம.இ.கா.தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் , சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் உட்பட பல பிரமுகர்களும் பக்தர்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.
சுமார் 20 லட்சம் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்ட பின் 5ஆவது முறையாக இந்த ஆலயம் கும்பாபிஷேகம் கண்டுள்ளதாக ஆலய திருப்பணி குழுத் தலைவர் சங்கர கணேஷ் கூறினார்.

கடந்த ஓராண்டு காலமாக திருப்பணி நடைபெற்ற இந்தஆலயம் சிறப்பான முறையில் கும்பாபிஷே விழா காண்டதற்கு பொது மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்புமே காரணம் என்று அவர் தெரிவித்தார். சுங்கை சிப்புட் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த தலைமை ஸ்தபதி ஸ்ரீதர் மற்றும் அவர்தம் குழுவினர், கோவில் கோபுரங்களையும் , சிற்பங்களையும் புனரமைத்திருந்தனர். ஆலயத்தின் பிரதான குருக்கள் சிவஸ்ரீ பூ. ச. சற்குணன் சிவாச்சாரியார், தமிழ்நாடு மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சுமார் 30 குருமார்களின் துணையோடு யாக சாலை பூஜைகளையும் மகா கும்பாபிஷேகத்தையும் நடத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!