
ஈப்போ , நவ 3 – இன்று பேரா சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷா அவர்களின் 67 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்திலும், 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்திலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற நாட்டின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை ஷெரீன் சாம்சன் வல்லபாய் உட்பட மூன்று விளையாட்டாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஷெரீனுடன் ,ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற முஹம்மது அஸீம் ஃபஹ்மி, 3 மீட்டர் டைவிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முஹத் ஷபிக் புதே ஆகியோர் PJK விருது பெற்றனர்.