Latestமலேசியா

பேரா தே.மு தொகுதி பங்கீட்டில் இப்போதை நிலை தொடரும் மந்திரிபுசார் திட்டவட்டம்

ஈப்போ, ஆக 16 – பேரா மாநில நிலையிலான தேசிய முன்னணி தொகுதி பங்கீட்டில் எந்தவொரு மாற்றம் இன்றி தற்போதைய நிலை தொடர்ந்து நிலைநாட்டப்படும் என பேரா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ சராணி முகமட் விளக்கம் அளித்துள்ளார். அம்னோ, ம.இ.கா மற்றும் ம.சீ.ச ஆகிய உறுப்புக் கட்சிகளின் தொகுதி பங்கீடு எந்தவொரு மற்றமும் இன்றி தொடரும். தேசிய முன்னணியின் தலைமைத்துவம் விவாதித்து முடிவு எடுக்காத வரை இதற்கு முன் இருந்ததைப்போல் உறுப்பு கட்சிகளுக்கான தொகுதிகளில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என சராணி முகமட் இன்று தெரிவித்தார். மாநில ஆட்சிக்குழுவில் ம.இ.கா பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கோரியிருப்பது குறித்து கருத்துரைத்தபோது மந்திரிபுசார் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!