கோலாலம்பூர், டிச 12 – அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் சீன தேசிய கொடிகளை அசைத்த நிகழ்வில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) சம்பந்தப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் பேரா பாஸ் ஆணையர் ரஸ்மான் ஸக்கரியா ( Razman Zakaria ) மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பேரா பாஸ் முகநூல் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் Razman மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, அந்த அணிவகுப்பில் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சரான Nga கலந்துகொண்டதாக தாம் பொய்யான குற்றச்சாட்டு கூறியதையும் ஒப்புக்கொண்டார்.
அதே வேளையில் இரண்டு தனி நிகழ்வுகளின் குழப்பத்தினால் இந்த குற்றச்சாட்டு தோன்றியதாக அவர் தெளிவுபடுத்தினார்.
குற்றச்சாட்டுக்கு தான் ஙா கோர் மிங்கிடம் (Nga Kor Ming) நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்வதோடு , அந்த அறிக்கையையும் நீக்கிவிட்டதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை மீண்டும் தெரிவிக்கப் போவதில்லை என்ற உறுதியையும் தெரிவிப்பதாக Razman பதிவிட்டுள்ளார்.