மஞ்சோங் , மே 11 – பேராவில் Manjung வட்டாரத்தில் நான்கு இடங்களில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வாடிக்கையாளர்களுக்கு மனமகிழ் சேவை வழங்கிய 29 வியட்னாமிய பெண்கள் உட்பட 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக பேரா குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Meor Hezbullah Meor Abdul Malik தெரிவித்தார். இரவு 11 மணிக்கு தொடங்கிய OP Gegar நடவடிகை அதிகாலை 2 மணிவரை நடைபெற்றபோது 82 தனிப்பட்ட நபர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்ட பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான 39 சட்டவிரோத குடியேறிகளில் வியட்னாம், மியன்மார், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என இன்று காலையில் செய்தியாளர்களிடம் Meor Hezbullah கூறினார். GRO சேவைகள் மற்றும் உடப்புப்பிடி சேவைகள் வழங்கி வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து 2 பொழுதுபோக்கு விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் ஈப்போவிலுள்ள குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு மேல் விசாரணைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர்.