
ஈப்போ, ஆக 31 – பேராவில் Indera Mulia விளையாட்டரங்கில் நடைபெறும் மாநில நிலையிலான இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை அங்கு ஏற்பட்ட புயல் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் உடனடியாக பழுதுபார்க்கும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டதைத் தொடர்ந்து இன்றைய தேசிய தின கொண்டாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yahaya Hassan தெரிவித்தார். Sungai Senam மில் Indera Mulia விளையாட்டரங்கம் உட்பட பலவேறு இடங்களில் புயல் பாதிப்பை ஏற்படுத்தியது குறித்து நேற்று மாலை மணி 5.45 அளவில் மாவட்ட கட்டுப்பாட்டு நிலையத்தில் நாங்கள் தகவலைப் பெற்றோம் என அவர் கூறினார். புயலினால் எவரும் காயம் அடையவில்லை.
பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததோடு தேசிய தின கொண்டாட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டன. விருந்தினர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரதான கூடாராங்களுடன் விளக்கு கம்பங்களும் கீழே சாய்ந்ததாக Yahaya Hassan தெரிவித்தார். தீயணைப்புத்துறை, மக்கள் தொண்டூழிய படை, சிவில் பாதுகாப்பு படை, பொதுப்பணித்துறை , மாவட்ட அலுவலகம் மற்றும் போலீசாரும் பழுதுபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரின் ஒத்துழைப்போடு இன்றைய தேசிய தின கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெறுவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என அவர் தெரவித்தார். இதற்கு முன் புயல் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.