
புத்ராஜெயா, ஜன 9 – பத்தாங் காலி நிலச்சரிவின் போது தேடி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தீயணைப்பு மீட்பு படையின் K9 மோப்ப நாய்களான Blake , Lady, Grouse, Pop ஆகியவற்றுக்கு, ‘Golden Performance’ எனப்படும் சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது .
ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) அந்த பதக்கங்களை அணிவித்தார்.
அண்மையில், பேரிடர் பகுதியில், தீயணைப்பு வீரர்களோடு, அயராது உழைத்த K9 மோப்ப நாய்கள், மலேசியர்களின் மனதை கொள்ளைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.