கோலாலம்பூர், நவ 26 – இம்மாத தொடக்கத்தில் பினாங்கில் பயணி ஒருவர் மின்சாரம் பாய்ந்து மரணம் அடைந்ததைத் தொடர்ந்து பேருந்துகளில் 3 பின் மின்சார சோக்கேட் மற்றும் USB கருவிகள் பயன்படுத்துவதற்கு அமைச்சு விதித்த தடையை போக்குவரத்து அமைச்சர் தற்காத்தார்.
பயணிகளின் உயிர் சம்பந்தப்பட்டதாகவும் மற்றும் பேருந்தின் மின் இணைப்பு முறையின் பாதுகாப்பை கருதி இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏற்கனவே ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே இது சாதாரன விவகாரம் அல்ல. பேருந்தில் கை தொலைபேசியை சார்ஜ் செய்யும்போது மரணம் அடைவார்கள் என எவரும் நினைத்துப் பார்ப்பார்களா என்றும் அவர் வினவினார்.
பேருந்தில் மின் இணைப்பு முறை பெரிய அளவிலான அமைப்பு முறையை கொண்டுள்ளது. இதனை சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என அந்தோனி லோக் தெரிவித்தார்.