
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். செய்கின்ற தொழில் சிறிய வருமானம் கொடுக்கின்றதா பெரிய வருமானம் கொடுக்கின்றதா என்பதை தாண்டி செய்கின்ற தொழிலை கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் அடிப்படையில் செய்தால் அது நமக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும். அத்தொழிலை கைவிடும் சூழ்நிலை வரும்போது மனம் ஏங்கும் பரிதவிக்கும்.
அதற்கு உதாரணமாக இருந்தது தமிழகத்தில் 60வயதை எட்டிய முத்துப்பாண்டி என்பவரின் செயல். அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுனராக பல ஆண்டு காலம் வேலை செய்து ஓய்வு பெறும் நாளன்று தான் ஓட்டிய பேருந்து மீது காட்டிய உணர்ச்சிப் பொங்கும் அன்புதான் அதற்கு காரணம். பேருந்தின் Steering-கை முத்தமிட்டு படிகட்டை வணங்கி பேருந்தின் முன்பகுதியைக் கட்டித்தழுவிய காணொலி ஒன்று வலைத்தளவாசிகளை மனம் நெகிழச் செய்து பரவலாக பகிரப்பட்டும் வருகிறது. இதுவென்ன வேலை என செய்கின்ற தொழிலை திட்டித் தீர்க்கும் பலருக்கு இக்காணொலி தொழில் மீது எப்படி திருப்தி கொள்வது என்பதை பாடம் சொல்லிக் கொடுத்திருப்பதாக பலர் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.