
புளோரிடா, அக்டோபர் 3 – பேஸ்பால் ஆட்டம் நடைபெற்ற அரங்கத்திற்கு, நீண்ட அலகுடைய அலிகேட்டர் முதலையை அழைத்துச் சென்ற ஆடவர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அச்சம்பவம் செப்டம்பர் 27-ஆம் தேதி, அமெரிக்கா, புளோரிடாவிலுள்ள, Citizens Bank Park அரங்கில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
1.5 நீட்டர் நீளமுள்ள Wally எனும் அந்த முதலையுடன், சம்பந்தப்பட்ட ஆடவர் அரங்கிற்கு வெளியே நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
அரங்கில் நாய் மற்றும் குதிரையை மட்டுமே அனுமதிக்க முடியும். முதலையை கொண்டு செல்ல முடியாது என கூறி, அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் ஜோயி ஹென்னி எனும் அந்த ஆடவரை தடுத்தி நிறுத்தியதாக கூறப்படுகிறது.
2014-ஆம் ஆண்டு, புளோரிடாவிலுள்ள, ஏரி ஒன்றிலிருந்து பிடிக்கப்பட்ட போது Wally-க்கு ஒரு வயதாகும்.
அதனை தத்தெடுத்து, சுமார் பத்தாண்டுகளாக பராமரித்து வளர்த்து வரும் ஜோயி, அது மிகவும் சாதுவானது எனவும், தம்முடன் ஒரே படுக்கையில் படுத்துறங்கும் எனவும் கூறியுள்ளது, இணைய பயனர்களை வியப்பில் ஆத்தியுள்ளது.