ஷ அலாம், மே 7 – சிலாங்கூர் காற்பந்து குழுவின் விளையாட்டாளர் Faisal Halim மீது அசிட் ஊற்றிய விவகாரம் தொடர்பில் இரண்டாவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளான். உள்நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவன் பண்டார் பாரு பாங்கி வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Hussein Omar Khan தெரிவித்தார். 30 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி நேற்று மாலையில் கைது செய்யப்பட்டதோடு விசாரணைக்காக தடுத்து வைக்கும் உத்தரவு பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் பெறப்படும் என Hussein கூறினார்.
இதற்கு முன்னதாக அம்பாங் பண்டான் இன்டாவில் முதலாவது சந்தேகப் பேர்வழியை போலீசார கைது செய்தனர். ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் அழகான கோல் அடித்த ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்ற ஹரிமாவ் மலாயா குழுவின் ஆட்டக்காரருமான Faisal மீது ஞாயிற்றுக்கிழமையன்று கோத்தா டமன்சாரா வர்த்தக வளாகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் அசிட் ஊற்றிய பின் தப்பிச் சென்றனர்.