Latestமலேசியா

பைசால் ஹலிமுக்கு எதிரான அமில தாக்குதல் ; காரணம் இதுவரை தெரியவில்லை

கோலாலம்பூர், ஜூன் 14 – சிலாங்கூர் எப்சி (Selangor FC) அணி வீரர் பைசால் ஹலிம் உட்பட இதர இரு காற்பந்து ஆட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அமில வீச்சு சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை, அரச மலேசிய போலீஸ் படை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

குறிப்பாக, பைசாலை உட்படுத்திய தாக்குதல் தொடர்பில், FAM – மலேசிய காற்பந்து சங்கத்தை உட்படுத்தி இரு கட்ட விசாரணைகளை போலீசார் நடத்தியுள்ளதாகவும், அந்த விசாரணை தொடர்வதாகவும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஜைன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) தெரிவித்தார்.

எனினும், அம்மூன்று தாக்குதல்களுக்கும் பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என்பதையும் ஷுஹைலி ஒப்புக் கொண்டார்.

எனினும், இரு நாட்களுக்கு ஒருமுறை அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பது மட்டும் தெரிவதாக அவர் சொன்னார்.

பைசாலை தாக்கிய குற்றவாளியை கண்டறிய, கைரேகைகள் சில சேகரிக்கப்பட்டன. எனினும், அவற்றின் முடிவு எதிர்மறையாகவே இருந்தன.

மாதிரி புகைப்படமும் அதிகம் உதவவில்லை. 

அந்த தாக்குதலை நேரில் கண்ட சாட்சியாளர்கள் எவரும் இல்லை என்பதால், விசாரணை அவ்வளவு எளிதானதாக இல்லை.

அதனால் அது சவால்மிகுந்த ஒரு வழக்கு என்பதோடு, குற்றவாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இருந்து போலீஸ் ஒருபோதும் பின்வாங்காது எனவும் ஷுஹைலி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!