Latestஉலகம்

பைடன் பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையை பெற்றாரா? ; இல்லை என்கிறது வெள்ளை மாளிகை

வாஷிங்டன், ஜூலை 9 – அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பார்கின்சன் அல்லது நடுக்குவாதம் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட்டு தொடங்கி இவ்வாண்டு மார்ச் வரை, பார்கின்சன் நிபுணத்துவ மருத்துவர் ஒருவர், வெள்ளை மாளிகைக்கு எட்டு முறை வருகை புரிந்துள்ளதாக, நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, பைடன் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா எனும் சந்தேகம் மேலோங்கியுள்ளது.

குறிப்பாக, கடந்த ஜூன் 27-ஆம், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புடனான விவாதத்தின் போது, பைடன் பலவீனமாக காணப்பட்டதோடு, தடுமாறினார். அதனால், நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு அவர் ஆரோக்கியமாக இல்லை என, ஜனநாயக் கட்சியினர் மத்தியிலேயே சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், பைடன் ஒருபோதும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்படவில்லை. அதற்காக அவர் சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை என வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளர் கரீன் ஜீன் பியர் (Karine Jean Pierre) திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆனால், பார்கின்சன் நோய் நிபுணர் எதற்கு வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார் என்ற விவரத்தை அவர் வெளியிட மறுத்து விட்டார்.

வெள்ளை மாளிக்கையில் பணியில் இருக்கும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக அந்த மருத்துவர் வந்திருக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக அது தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என கரீன் கூறியுள்ளது, சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!