கோலாதிரெங்கானு, ஏப் 7 – அடுத்த நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் இவ்வேளையில் நாட்டில் பல இடங்களில் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் பற்றாக்குறை தொடர்ந்து ஏற்பட்டுவருவதால் பயனீட்டாளர்கள் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கோலாத்திரெங்கானு மற்றும் கோலா நெரஸ் வட்டாரத்தில் பேரங்காடிகள் , மளிகைக் கடைகளில் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிகிறது.
இதனால் 3 கிலோ மற்றும் 5 கிலோ சமையல் எண்ணெய்யை வழக்கமான விலையைவிட கூடுதல் விலையில் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியிருப்பதாக பயனீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொட்டலங்களில் அடைக்கப்பட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு வருவதால் இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.