கோலாலம்பூர், பிப் 10 – ஷா ஆலாம் செக்சன் 27 இல் தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் கண்ட ஒரு பொட்டலத்தில் இருந்தது பெண்ணின் உடல் அல்ல. அந்த பொட்டலத்தில் சுற்றப்பட்டிருந்தது பெண் மெழுகு பொம்மை என ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Baharuddin Mat Taib உறுதிப்படுத்தினார். திடக் கழிவு அகற்றும் பணியாளர்கள் நேற்று மாலை மணி 3 அளவில் கண்டுபிடித்த பொட்டலம் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போர்வை மற்றும் பிளாஸ்டிக்கினால் சுற்றப்பட்டிருந்த பொட்டலத்திற்குள் பெண் மெழுகுவர்த்தி பொம்மை இருந்தது என Baharuddin Mat Taib கூறினார். சமூக வலைத்தலத்தில் அந்த பொட்டலம் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் பகிரப்பட்டதைத் தொடர்ந்து தவறான தகவல் பரப்பப்படுவதை தடுக்கும் பொருட்டு இந்த விளக்கத்தை அளிப்பதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close