பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8 – கோத்தா டாமான்சாராவில் பொதுக் கழிவறையில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைதாகியுள்ளார்.
அங்குள்ள பேரங்காடியொன்றில் மார்ச் 22-ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
வரம்பு மீறிய ஆசிரியரின் செயலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான 14 வயது மாணவி, வெள்ளிக்கிழமையன்று போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து 27 வயது அவ்வாடவர் கைதாகி, ஏப்ரல் 10 வரை விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
2017 சிறார் வன்கொடுமைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.