Latestமலேசியா

பொதுத் தேர்தலுக்கு பொருத்தமான நேரம் எது? தாஜூடினுக்கு முகட் ஹசான் கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 4 – 15 ஆவது பொதுத் தேர்தல் நாட்டில் எப்போது நடத்த வேண்டும் என மக்களுக்கு தெரிவிக்கும்படி பாசீர் சாலாக் எம்.பி Tajuddin Abdul Rahman னை அம்னோவின் துணைத்தலைவர் Mohamad Hassan கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த வேண்டுமா அல்லலது நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் காலாவதியாகும்வரை காத்திருந்த பின்னர் 2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தேர்தல் நடத்தலாமா என்றும் முகமட் ஹசான் வினவினார்.

பொதுத் தேர்தல் நடத்தும்படி பிரதமருக்கு நான் நெருக்குதல் கொடுப்பதாக தாஜூடின் கூறியுள்ளார். அப்படியானால் 15ஆவது பொதுத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து அனைத்து அம்னோ உறுப்பினர்களுக்கும் தாஜூடின் ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!