
கோலாலம்பூர், ஜூன் 3 – 15 -வது பொதுத் தேர்தலை இனியும் தாமதப்படுத்தாமல் விரைவுப்படுத்துமாறு வலியுறுத்தி வரும் சில அம்னோ உறுப்பினர்கள், முதலில் தாங்கள் சரியான தடத்தில் இருப்பதை உறுதிச் செய்யுமாறு, கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து பிரதமரே முடிவு செய்வார் . மேலும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு கேட்பவர்கள் தேர்தலை நடத்துவதற்கான தயார் நிலை குறித்து சற்றும் சிந்திக்காதவர்கள் என அந்த ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கின்றார்.
இவ்வேளையில் பொதுத் தேர்தல் என்பது மாநில தேர்தல் போன்று இல்லை என சுகாதார அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.