Latest

பொதுத் தேர்தல் எப்போது நடத்தலாம் என பேரரசர் வினவினார் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 10- இன்று இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் அப்துல்லாவை தாம் சந்தித்தபோது 15 ஆவது பொதுத் தேர்தல் எப்போது நடத்தலாம் என அவர் தம்மிடம் வினவியதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இப்போதைய காலக்கட்டத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்பதோடு இப்போது பொதுத் தேர்தல் நடத்தினால் சபாவில் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையைப் போன்று மக்களின் உயிருக்கு மிரட்டல் ஏற்படலாம் என தாம் பேரரசரிடம் விளக்கம் அளித்ததாக முன்னாள் பிரதமருமான மகாதீர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தலாமா அல்லது எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தலாமா என்று பேரரசர் என்னிடம் வினவினார். சபாவில் மாநில தேர்தலுக்கு பிறகு என்ன நடந்தது என்பதை நமது கண்கூடாக பார்த்துவிட்டோம். தேர்தல் நடத்தினால் அந்த நிலைதான் இப்போது ஏற்படும். இப்போது தேர்தல் நடத்தினால் 4ஆவது கோவிட் அலையை மலேசியா சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் தாம் சுட்டிக்காட்டியதாக டாக்டர் மகாதீர் கூறினார்.
குறைந்த பட்சம் 80 விழுக்காட்டிற்கும் கூடுதலான மக்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் வேண்டுமானால் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கலாம். அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி சபாவைப் போன்ற நிலை உருவாகுவதற்கு அனுமதித்துவிடக்கூடாது என தாம் பேரரசருக்கு நினைவுறுத்தியதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!