
நாட்டின் 15-வது பொதுத் தேர்தலின் போது, திரங்கானுவில் அரசியல் கட்சி ஒன்றுக்கு வாக்களிப்பதற்காக, சன்மானம் பெற்றதாக நம்பப்படும் 90 பேரை ஊழல் தடுப்பு ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
அவ்விவகாரம் தொடர்பில் வைரலான காணொளி குறித்த விசாரணைக்காக அவர்கள் அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதையும் ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது.
வாக்களிக்கும் நோக்கத்திற்காக, பாஸ் கட்சியிடமிருந்து பணத்தை பெறுவதற்காக, கட்டடம் ஒன்றின் முன் மக்கள் திரண்டிருக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, அந்த காணொளியில் திரண்டிருந்தவர்களுக்கு பணம் கொடுக்கும் நபரிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளவர்களில் பலர், திரங்கானுவில் வசிக்கவில்லை என்பதால், அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இன்னும் இரு வாரங்களில் விசாரணை நிறைவுப் பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.