கோலாலம்பூர், ஏப் 7 – பொதுமக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு அம்னோ மிதவாதமாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் தேசிய முன்னணியின் தலைமை செயலாளருமான ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்திருக்கிறார்.
2018 ஆம் ஆண்டுவரை 41ஆண்டு காலமாக தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தலைமையேற்றிருந்த அம்னோ தீவிரவாத போக்குடன் இருந்ததில்லை என அவர் கூறினார்.
தற்போது அதிகமான இன மற்றும் சமய விவகாரங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய விவகாரங்களில் கட்சியின் சிறு பிரிவினர் குரல் எழுப்பி வருகின்றர்.
எனினும் கட்சியின் போராட்டம் மற்றும் நடுநிலையோடு இருக்கும் கோட்பாட்டை அம்னோ தலைமைத்துவமும் தேசிய முன்னணியும் எப்போதும் பின்பற்றி வருவதாக உயர்க்கல்வி அமைச்சருமான ஜம்ரி கூறினார்.
நாம் தொடர்ந்து மிதவாதமான கொள்கைகையுடன் இருந்துவரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.