Latestமலேசியா

பொதுவில் கத்தியைக் காட்டி மிரட்டிய ஆடவனுக்கு 5 ஆண்டுகள் சிறை

சிபு,மார்ச் 31- மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டு , கையில் கத்தியை ஏந்தியவாறு பிற வாகனமோட்டிகளை மிரட்டிச் சென்ற ஆடவனுக்கு, 5 ஆண்டுகள் சிறையும், ஒரு பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டது.

வழக்கறிஞர் பிரதிநிதிக்காத 42 வயது Ling Pick Teck தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, சிபு செஷன்ஸ் நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்தது.

கடந்தாண்டு டிசம்பர் 27-ஆம் தேதி, சிபு, Jalan Pulau சாலையில் , அந்த ஆடவர் கத்தியைக் காட்டி மிரட்டிச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு பலரது கவனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!