Latestமலேசியா

பொது உயர் கல்விக் கூட மாணவர்களுக்கான மானிய விலை விமான டிக்கெட் சலுகை மீண்டும் வந்துள்ளது

புத்ராஜெயா, மே-3, பொது உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு மானிய விலையில் விமான டிக்கெட்களை வழங்கும் சலுகைத் திட்டம் நேற்று முதல் மீண்டும் நடப்புக்கு வந்துள்ளது.

FLYsiswa எனும் அந்த உதவித் தொகைத் திட்டம் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக், லாபுவான் இடையிலான உள்நாட்டு விமானப் பயணங்களை உட்படுத்தியுள்ளது.

தற்போதைக்கு, அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் ஆகியவற்றில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரை பதிந்துக் கொண்ட மாணவர்களே அச்சலுகையைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.

அதே, இவ்வாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பதிந்துக் கொண்ட புதிய மாணவர்கள், வரும் ஜூலை முதல் அந்த மானிய விலைச் சலுகையை அனுபவிக்கலாம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

தகுதிப் பெற்ற மாணவர்கள் போக்குவரத்து அமைச்சின் இணைய அகப்பக்கத்தில் அதனைச் சரிபார்த்துக் கொண்டு, மானிய விலையிலான டிக்கெட்டுகளை வாங்க விண்ணப்பிக்கலாம்.

தகுதிப் பெறாதவர்கள், தத்தம் உயர்கல்விக் கூடங்கள் வாயிலாக கல்வி அமைச்சிடமோ அல்லது உயர் கல்வி அமைச்சிடமோ மேல்முறையீடு செய்யலாம்.

விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு, அந்தந்த விமான நிறுவனங்கள் டிக்கெட் வாங்குவதற்கான 300 ரிங்கிட் டிஜிட்டல் பற்றுச் சீட்டை வழங்கும்.

Credit Shell வகையிலான அந்த பற்றுச் சீட்டு முறையின் கீழ், வாங்கும் டிக்கெட் 300 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருந்தால் மீதத் தொகையை அடுத்த முறை டிக்கெட் வாங்கும் போது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!