கோலாலம்பூர், செப்டம்பர் 5 – STPM, STAM, மெட்ரிகுலேஷன், Foundation, டிப்ளோமா ஆகியவற்றின் பட்டதாரிகள் தொடர்ந்து பொது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான இளங்கலை எனும் டிகிரி கல்வி நிலையின் விண்ணப்ப முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.
நாளை வெள்ளிக்கிழமை 12 மணி முதல் செப்டம்பர் 15ஆம் திகதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களின் முடிவுகளைப் பார்வையிட முடியும் என உயர்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது பல்கலைக்கழகங்களின் இணைப்பில் அல்லது UPUPocket எனும் மொபைல் செயலி மூலம் முடிவுகளை அறிந்து கொள்ளமுடியும்.
இதனிடையே, பொது பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காத மாணவர்கள், மீண்டும் 10 நாட்களுக்குள் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை UPU அகப்பக்கத்தின் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் என KPT தெரிவித்திருக்கிறது.