கோலாலம்பூர், மார்ச் 4 – பொது பல்கலைக்கழக மாணவர்களில் 17,613 பேர் கடந்த ஆண்டு தங்களது கல்வியை தொடரவில்லை. இதர 5,165 மாணவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் தெரிவிக்காமல் தங்களது கல்வியை ஒத்திவைத்தனர் என உயர்க்கல்வி அமைச்சர் Noraini Ahmad தெரிவித்தார். தனியார் பல்கலைக்கழக மாணவர்களில் 20,577 மாணவர்கள் தங்களது கல்வியை ஒத்தி வைத்தனர். தனிப்பட்ட அல்லது குடும்ப உறுப்பினர்களின் சுகாதார பிரச்னை, நிதி நெருக்கடி மற்றும் வேலை செய்வதற்காக அவர்கள் கல்வியை ஒத்திவைத்ததாக Noraini Ahmad கூறினார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்9 hours ago