Latestசினிமா

பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் இன்னும் ஒன்பது மாதங்களில் வெளியீடு காணும்

சென்னை, செப் 19 – இயக்குனர் மணிரத்தினத்தின், மிக பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் இரு வாரங்களில் வெளியீடு காணவுள்ளது.

அதனை முன்னிட்டு, திரைப்பட குழுவினர் விளம்பர நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா, சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட அந்த பழம்பெரும் இயக்குனர், பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் எப்போது திரையீடு காணும் என்பது குறித்தும் கோடிகாட்டினார்.

இன்னும் ஒன்பது மாதங்களில் அந்த இரண்டாவது பாகம் உலகம் முழுவதும் திரையீடு காணுமென அவர் கூறினார்.

அதாவது அடுத்தாண்டு, ஜூன் மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியீடு காணலாம்.

அத்திரைப்படத்தின் இரு பாகங்களுக்கான ஒளிப்பதிவும் நிறைவடைந்து விட்டன.

எனினும், ஒளிப்பதிவுக்கு பிந்தைய பணிகள் இன்னும் முடிவடைய வில்லை.

அவை முழு வீச்சில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மணிரத்தினம் சொன்னார்.

கல்கியின் இதிகாச நூலான பொன்னின் செல்வன் எனும் நூலை தழுவி, அதே பெயரில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிசா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய் பட்சன், ஜெயராம், பிரபு, சரத்குமார், நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, அஸ்வின் கக்காமானு, ரஹ்மான், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜெயசித்திரா என பெரிய நட்சத்திர பட்டாளமே அத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இம்மாதம் 30-ஆம் தேதி, உலகம் முழுவதும், ஒரே சமயத்தில் ஐந்து மொழிகளில் அந்த திரைப்படம் திரையீடு காணவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!