புது டில்லி, மார்ச் 3 – மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களை உள்ளடக்கிய வரலாற்றுப் படமான பொன்னியன் செல்வன் திரைப்படம், இவ்வாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருவதாக, அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னத்தின் இயக்கத்தில், லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அத்திரைப்படம் இரு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
சோழப் பேரரசரின் பொற்காலத்தை திரையில் காணும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருப்பதோடு, ரசிகர்கள் மத்தியிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
அவ்வகையில், அப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பைச் செய்த படக் குழுவினர், முக்கிய நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர்.