Latestஉலகம்சினிமா

பொன்னியின் செல்வன் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியது

சென்னை, அக் 17- வரலாற்று சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவில் முதல் முறையாக 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி சாதனை புரிந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வழங்கியுள்ள பொன்னியின் செல்வன் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழகத்தில் வெளியீடு கண்ட 17 ஆவது நாளில் 200 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலாகியிருக்கிறது.

அனைத்துலக ரீதியில் பொன்னியின் செல்வன் 450 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலாகியிருப்பதாக பிரபல வர்த்தக நிபுணரான மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார். தமிழில் 200 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்த முதல் படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. வயதானவர்களையும் திரையுரங்கிற்கு வரவழைத்த பெருமை பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இருப்பதாக பிரபல வர்த்தக ஆய்வாளரான ஸ்ரீதர் பிள்ளை தெரிவித்தார். அந்த திரைப்படம் வெளியீடு கண்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் தொடர்ந்து படம் பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!