Latestமலேசியா

பொருட்களின் விலைகள் மக்களுக்கு சுமையாக இருப்பதை தடுப்பதற்கு அரசின் நடவடிக்கை தொடரும் – பிரதமர் அன்வார்

ஈப்போ, ஆக 25 – மலேசியாவில் பொருட்களின் விலைகள் மக்களுக்கு சுமையாக இருப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது உட்பட கூடுதலான பல்வேறு நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடும் என அவர் கூறினார். இந்த விவகாரத்தின் அடிப்படையை பொதுமக்களில் பலர் புரிந்துகொள்ளாவிட்டாலும் பொருட்களின் விலையேற்ற பிரச்சனையில் அரசாங்கம் மெத்தன போக்காக இல்லையென்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அண்மையில் காலமான உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவீன முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ Salahudin Ayub மக்களின் சிரமத்தை புரிந்துகொண்டு அரசாங்கத்தில் பல்வேறு செயல் நடவடிக்கையில் ஈடுபட்டதை சிறந்த முன்னுதாரணமாக இருந்ததை அன்வார் சுட்டிக்காட்டினார். பொருட்களின் விலைகளை குறைப்பதில் நிறுவனங்களுடன் எப்படி ஆலோசனை நடத்துவது, கடைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் எப்படி விலைகளை குறைக்க முடியும் போன்ற விவகாரங்களில் அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் பொருட்களின் விலை உயரவு பிரச்னை உலகம் முழுவதிலும் எதிர்நோக்கி வருவதால் நம்மால் முடிந்தவரை இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முயன்று வருகிறோம் என ஈப்போவில் Rahmah விற்பனை பெருவிழாவை தொடக்கி வைத்து பேசியபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!