கோலாலம்பூர், பிப் 5 – பொருட்களின் விலைகள் 10 விழுக்காடுவரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் உணவு அல்லாத பொருள்களின் உற்பத்தி செலவுகள் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் 10 விழுக்காடு விலை உயர்வுக்கு பயனீட்டாளர்கள் தயாராய் இருக்க வேண்டும் என மலேசிய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் Soh Thian Lai கூறினார்.
ரொட்டி,முட்டைகள், குழந்தைகளுக்கான Diapers , சலவை தூள் போன்றவற்றின் விலைகள் டிசம்பர் மாதம் உயர்ந்தாக மலேசிய உற்பத்தியாளரகள் சம்மேளனம் மேற்கொண்ட ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களின் உற்பத்தி செலவுகளை பயனீட்டாளர்களிடம் தினிப்பதற்காக பொருட்களின் விலையை அதிகரிக்கக்கூடும் என Soh Thian Lai சுட்டிக்காட்டினார்.