
ஷா அலாம், ஆக 31 – திட்டமிடப்பட்ட அனைத்து மேம்பாடுகளையும் முறையாக அமல்படுத்துவதன் மூலம் மக்கள் தங்களது பொருளாதார இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்டும்படி நாட்டின் தலைவர்களுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் Sharafuddin Idris Shah
அறைகூவலல் விடுத்துள்ளார். தனது பொருளாதாரம் மற்றும் முதலீடுகளுக்காக சுயகாலில் இருப்பதற்காக அனைத்துலக ரீதியில் மலேசியா மீண்டும் மதிக்கப்பட வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் உண்மையான அர்தத்தின் முக்கியத்தை மலேசியர்கள் மதிக்க வேண்டும் என்றும் என்றும் சுல்தான் Sharafuddin நினைவுறுத்தினார்.
தேச விசுவாச உணர்வைவும் நாட்டின் மீது நேசம் மற்றும் பற்றையும் கொண்டிருக்கும் உணர்வுக்கு இது மேலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். மலேசியாவின் 66 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் அரச அலுலக முகநூலில் வெளியிட்ட பதிவில் சுல்தான் இதனை தெரிவித்துள்ளார். விசுவாச உணர்வு, ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதார சுபிட்சத்திற்கும் மக்களின் நலத்திற்காகவும் ஆக்கப்பூர்வமான விளைவுகளை கொண்டுவருவதாக அமைய வேண்டும் என்றும் சுல்தான் Sharafuddin வலியுறுத்தினார்.