செர்டாங், பிப் 20 – ஶ்ரீ கெம்பாஙான், செர்டாங் பெர்டானாவில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணமென போலீஸ் சந்தேகிக்கிறது.
அந்த சம்பவம் தொடர்பில், 33 வயதுடைய அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டிருப்பதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் எ. எ. அன்பழகன் தெரிவித்தார். லாரி ஓட்டுநரான அந்த ஆடவன் தானாகவே செர்டாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் சரணடைந்ததாக அவர் கூறினார்.
வீட்டு அலுவலக தளவாடப் பொருட்களை விற்கும் கடையின் உரிமையாளரான 29 வயது பெண் , அவரது கடையில் நேற்று ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.