Latestமலேசியா

பொறி வைக்கப்பட்ட ஒரே நாளில் சிக்கிய முதலை; ஷா ஆலாம் பொது மக்கள் நிம்மதி பெருமூச்சு

ஷா ஆலாம், செப்டம்பர் -5, சிலாங்கூர், ஷா ஆலாம், Taman Tasik Seksyen 7-ல் அடிக்கடி நடமாடி வந்த முதலை, பொறி வைக்கப்பட்ட ஒரே நாளில் பிடிபட்டுள்ளது.

நேற்றிரவு 10.20 மணியளவில் அது பொறி கூண்டில் சிக்கியதை, சிலாங்கூர் மாநில வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையான PERHILITAN உறுதிப்படுத்தியது.

PERHILITAN வரலாற்றில் இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முதலை சிக்கியது இதுவே முதன் முறையாகும்.

நாங்கள் கூட ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் பிடிக்கமென்று எண்ணியிருந்தோம் என, மாநில PERHILITAN இயக்குநர் Wan Mohd Adib Wan Mohd Yusoh தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு முன்கூட்டியே ஏரியை தற்காலிமாக மூடியதால், அமைதியான சூழல் நிலவி முதலை வெளியே வந்திருக்கலாமென்றார் அவர்.

பரிசோதித்ததில், அது ஆண் முதலையென்றும், 1.68 மீட்டர் நீளமும், 15 முதல் 20 கிலோ கிராம் எடையும், 2 முதல் 5 வயதிலானதாக இருக்கலாமென்றும் தெரிவிக்கப்பட்டது.

முதலை உடனடியாக டெங்கில், Paya Indah Wetlands முதலைகள் சரணாலயத்திற்கு அனுப்பப்படுகிறது.

ஆகஸ்ட் 18-ஆம் தேதி அந்த ஏரியில் ஒரு முதலை தென்பட்ட செய்தி வைரலாகி பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியது.

இதையடுத்து, கோழியைத் தீனியாக்கி முதலையைப் பொறி வைத்துப் பிடிப்பதற்காக, நேற்று காலை அங்கு 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!