பூச்சோங், ஜன 4 – பொழுது போக்கிற்காக தமது இரு நண்பர்களுடன் பூச்சோங், ஜாலான் வாவாசானில் , புக்கிட் வாவாசான் மேட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் மயங்கி கீழே விழுந்து மரணம் அடைந்தார். காலை மணி 10.49 அளவில் இது குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பூச்சோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்பு குழு அனுப்பிவைக்கப்பட்டது.
அவர்களின் உதவியோடு 130 கிலோ எடைக் கொண்ட உள்நாட்டு ஆடவர் மேட்டுப் பகுதியிலிருந்து கீழே இறக்கப்பட்டார். 28 வயதுடைய அவர் இறந்ததாக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தியது.