Latestமலேசியா

பொழுது போக்கிற்காக போலி துப்பாக்கி வாங்கிய ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், ஏப் 22 -இணையம் வாயிலாக போலி துப்பாக்கியை வாங்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதத்தை விதித்தது.

பிரிக்பீல்ட்ஸ், Jalan Pantai Dalam -மிலுள்ள Pantai Permai மக்கள் வீடமைப்பு பகுதியில் உள்ள வீட்டில், GLOCK வகை போலி துப்பாக்கியையும், 128 துப்பாக்கி தோட்டக்களையும் வைத்திருந்ததாக Abdul Rashid என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆடவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தினார்.

முன்னதாக, குறி சுடும் பொழுதுபோக்கு விளையாட்டிற்காக தான் அந்த போலி துப்பாக்கியை வாங்கியதாக அந்த ஆடவர் கூறியிருந்தார். எனினும் அந்த விளையாட்டில் ஆர்வம் இருந்தால் முறைப்படி கற்று அதற்கான அனுமதியைப் பெறும்படி மாஜிஸ்ஹிரேட் S Mageswary அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!