
ஜோகூர் பாரு, ஜன 4 – ஜோகூர் , Iskandar Puteri, Linkedua நெடுஞ்சாலையின் 5. 5 -வது கிலோமீட்டரில், போக்குவரத்துக்கு எதிராக வாகனத்தை செலுத்தி , விபத்தையும் ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்த 41 வயதான அந்த ஆடவர் , நேற்று மாலை, 4.40-க்கு கைது செய்யப்பட்டதாக Iskandar Puteri மாவட்ட போலீஸ் தலைவர் Rahmat Ariffin தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, கூலாயிலிருந்து Tanjung Pelepas துறைமுகம் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த அந்த ஓட்டுநர், இடையில் பாதையைத் தவற விட்டதால், தவறவிட்ட பாதைக்கு மீண்டும் செல்வதற்காக , போக்குவரத்துக்கு எதிராக லாரியை செலுத்தியதாக தெரிய வந்தது. அப்போது அந்த ஓட்டுநர் Mercedes Benz, Nissan Almera இரு கார்களை மோதித் தள்ளியதாக Rahmat கூறினார்.