
சிரம்பான், 27 – போக்குவரத்து அமைச்சர் Anthony Loke க்கின் அரசியல் செயலாளராக நீலாய் சட்டமன்ற உறுப்பினர் J. அருள் குமார் ஜம்புநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்திருப்பதாக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான Anthony Loke தெரிவித்தார். நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினருமான அருள் குமார் இன்று முதல் தமது புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் . பதவி உறுதிமொழி சடங்கு இன்று நடைபெறும் என Anthony Loke அந்தோனி லோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இரண்டாவது தவணையாக நீலாய் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் அருள் குமார் தோட்ட மற்றும் முஸ்லிம் அல்லாதார் குழுவுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நேற்று விலகினார். காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை நிரப்புவது குறித்து நெகிரி செம்பிலான் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனுடன் விவாதிக்கப்படும் என Anthony Loke தெரிவித்தார்.