
பாச்சோக் , ஜன 24 – கர்ப்பிணி ஒருவரை ஏற்றிச் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து தக்க சமயத்தில் இரண்டு போக்குவரத்து போலீஸ்காரர்கள் உதவியதால் அப்பெண் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் வழி காரிலேயே அப்பெண் பிரசவிப்பது தவிர்க்கப்பட்டதாக கிளந்தான் போக்குவரத்து போலீஸ் அமலாக்க மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையின் தலைவர் Superintendan Suhaimi Jusoh தெரிவித்தார். போக்குவரத்து பணியில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தபோதிலும் சாலையில் பொதுமக்களின் பிரச்னையை அறிந்து சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென போலீஸ்காரர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.