Latestசிங்கப்பூர்

போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்தாத வெளிநாட்டினரில் ஆக அதிகமானோர் சிங்கப்பூரியர்கள் – RM 3.5 மில்லியன்

சிங்கப்பூர், ஆகஸ்ட் 14 – மலேசியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன் அபராதமும் செலுத்தாத வெளிநாட்டினரில் பெரும்பாலோனோர் சிங்கப்பூரியர்களாவர்.

35,011 போக்குவரத்து சம்மன்களில் ஏறத்தாழ 3.5 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் சிங்கப்பூரியர்கள் செலுத்தப்படவில்லை என்று கணக்கிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து சமிஞ்சை விளக்கை மீறுவது, அவரசநிலை சாலைத் தடத்தில் வாகனம் ஓட்டுவது, சாலையின் இரட்டைக் கோட்டைக் கடந்து செல்வது, வாகனம் ஓட்டிக்கொண்டே கைப்பேசியைப் பயன்படுத்துவது, வேக வரம்பை மீறுவது போன்ற விதிமீறல்களுக்கான அபராதங்கள் செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்னும் செலுத்தப்படாத அபராதங்கள் குறித்து சம்பந்தபட்டவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து விதிமீறல்கள் புனாய்வு, அமலாக்கத்துறையின் இயக்குநர் முகமட் யுஸ்ரி ஹசான் பாஸ்ரி (Mohd Yusri Hassan Basri) தெரிவித்திருக்கிறார்.

அபராதத்தைச் செலுத்தாவிடில் மலேசியாவில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படலாம். ஆகையால், அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு முன்பு அபராதத்தைச் செலுத்திவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!