Latestமலேசியா

போக்குவரத்தை இடைமறித்த கொள்கல லாரி ; 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல்

பெந்தோங், பிப் 8 – Genting Sempah அருகில், விபத்தில் கொள்கல லாரி ஒன்று சாலையை மறித்துக் கொண்டதால், கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 35.2-வது கிலோமீட்டரில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் கிட்டதட்ட 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டதாக Anih Berhad நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

போக்குவரத்தை இடைமறித்திருந்த அந்த கொள்கல லாரியை அகற்றும் பணிகள் மாலை மணி 4- கிற்கு தொடங்கியதாகவும், 4. 30 அளவில் போக்குவரத்து மீண்டும் சுமூகமான நிலைக்கு திரும்பியதாகவும், அந்த நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!