Latestமலேசியா

போட்டிக்சனில் டஸ்கி லீப் குரங்கை சுடுவது அவசியம் – நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், பிப் 13  – மக்களுக்கு எதிராக பலமுறை தாக்குதல் நடத்தியிருப்பதால் போட்டிக்சனில் dusky leaf  வகையைச் சேர்ந்த ஏழு குரங்குகளை Perhilitan எனப்படும் வனவிலங்கு பூங்கா துறை சுட்டது அவசியமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சம்பவம் குறித்து Nurul Azreen Sultan மற்றும் மலேசிய உலகளாவிய வன விலங்கு அடிப்படை உரிமை இயக்கம் தொடுத்திருந்த வழக்கை தொடர்ந்து நீதித்துறை ஆணையர் முகமட் ஹைடர் அப்துல் அஸிஸ் (Mohamad Haldar Abdul Aziz) இந்த தீர்ப்பை அளித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம்தேதி Taman Raja Zainal லுக்கு அருகே Perhilitan மேற்கொண்ட நடவடிக்கையில் 20 பெரிய குரங்குகளும் அதன் குட்டிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதால் அதிருப்தியடைந்ததால் வாதிகள் வழக்கு தொடுத்தனர்.

வனவிலங்குகளை பாதுகாக்கும் பொறுப்புணர்வை பெர்ஹிலித்தான் கொண்டுள்ளதோடு அந்த அமைப்பு Dusky Leaf குரங்குகளை பாதுகாத்திருக்க வேண்டும் என்பதை 2010 ஆம் ஆண்டின் வனவிலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர் .

அதே வேளையில் மனிதர்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்தவொரு வனவிலங்குகளையும் அப்புறப்படுத்தும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களது நடவடிக்கை அமைந்ததாக Perhilitan தனது நடவடிக்கையை தற்காத்தது.

2021 ஆம் ஆண்டு மூன்று சம்பவங்களில் பொதுமக்களை தாக்கி காயப்படுத்தியதோடு Dusky Leaf குரங்குகள் முரட்டுத்தனமாக செயல்பட்டதால் அவற்றை கொன்றதாக பெர்ஹிலித்தான் தெரிவித்தது.

அந்த குரங்குகள் மக்களை தாக்கி காயம் விளைவிப்பதாக தொடர்ந்து புகார் கிடைத்ததால் வனவிலங்கு நிர்வாக நடைமுறையின் கீழ் Perhilitan னின் நடவடிக்கை அமைந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!