Latestமலேசியா

போதைப்பொருள் கடத்தல்: 5 இந்தியப் பிரஜைகளின் தூக்குத் தண்டனை 30 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றம்!

புத்ராஜெயா, மார்ச்-21- ஏழாண்டுகளுக்கு முன் நெகிரி செம்பிலான், ரந்தாவில் போதைப்பொருள் கடத்தியக் குற்றத்திற்காக 5 இந்தியப் பிரஜைகளுக்கு புத்ராஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றம் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Radhakrishnan Syam, Fazril Farook, Sainulabdeen Siyad, Abdul Kalam Sajeev, Salim Sabeer ஆகியோரே அந்த ஐவராவர்.

2023-ல் தாங்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரிய அவர்களின் மனுவில் முகாந்திரம் இல்லையென, மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.

என்றாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக நீதிமன்றம் குறைத்தது.

2 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 12 பிரம்படிகளும் விதிக்கப்படும்; அவ்வகையில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவான 24 பிரம்படிகளை அவர்கள் பெறுவர்.

தண்டனைக் காலம், அவர்கள் கைதான நாளான 2018, ஆகஸ்ட் 3-ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது என 2 குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!