பெக்கான், ஜனவரி-2, ஜாலான் குவாந்தான் – பெக்கான் சாலையில் 2 ஆடவர்களைக் கைதுச் செய்த சம்பவத்தில் போலீஸ் தரப்பில் எந்தவோர் அத்துமீறலும் நடக்கவில்லை.
பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Zaidi Mat Zin அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உண்மையில், Ops Cegah Jenayah சோதனையின் போது இரவு 9.40 மணி வாக்கில் Perodua Axia காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
காரிலிருந்த இருவரையும் சிறுநீர் பரிசோதனைக்கு உத்தரவிட்ட போது, அவர்கள் போலீசாரைத் தள்ளி விட்டு காருக்குள் புகுந்து தப்பியோட முயன்றனர்.
இதனால் 2 போலீஸ்கார்கள் கீழே விழுந்து சிராய்ப்பு காயங்களுக்கு ஆளாகினர்.
அதன் போது இலேசாக கைகலப்பும் ஏற்பட்டது.
எனினும், சந்தேக நபர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களைக் கைதுச் செய்ய குறைந்தபட்ச கடினத்தன்மையே பயன்படுத்தப்பட்டது; மற்றபடி வைரலானது போல் போலீசார் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளவில்லை.
எனவே, போலீசாரின் கடமை குறித்து இது போன்ற தவறான தகவல்களை பகிர்வதை பொது மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென, Mohd Zaidi கேட்டுக் கொண்டார்.
இதனிடையே கைதான 2 ஆடவர்களும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.