Latestமலேசியா

போதைப்பொருள் பதப்படுத்தும் விநியோக கும்பல் முறியடிப்பு

ஷா அலம், செப் 21- இம்மாதம் 13 மற்றும் 15 – ஆம் தேதிகளில் சிலாங்கூர் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில், உள்நாட்டைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போதைப்பொருள் விநியோகிக்கும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. செப்டம்பர் 13-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் Ampang, Puchong , Sri Damansara வட்டாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Arjunaidi Mohammed கூறினார்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் Petaling Jaya Damansara Perdana-வில் போதைப்பொருள் பதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். 2 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகம் மதிப்புள்ள 299 கிலோகிராம் போதைப்பொருள், இரண்டு கார்கள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1 லட்சத்து 52,000 ரிங்கிட் மதிப்புடைய ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக Arjunaidi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!