யான், பிப் 16 – போதைப் பொருள் வாங்குவதற்காக பணம் கொடுக்காத தனது வளர்ப்புத் தந்தையை, வேலையில்லாத ஆடவன் ஒருவன் எட்டி உதைத்த காணொளி , சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யான் ( Yan ) மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஹ்னாஸ் அக்தார் ஹாஜி ( Shahzaz Akhtar Haji ), 29 வயதுடைய அந்த ஆடவன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வளர்ப்பு தந்தை போலீசில் புகார் கொடுத்த வேளை, அவர் யான் மருத்துவமனையிக் சிகிச்சை பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அடிக்கடி தனது வளர்ப்புத் தந்தையை அடித்து வந்ததாக கூறப்படும் அந்த ஆடவனை, பின்னர் அங்குள்ள மக்கள் சேர்ந்து அடிக்கும் மற்றொரு காணொளியும் வெளியாகியிருக்கின்றது.