Latestமலேசியா

போதைப் பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறைக்கு மேலும் 20 மோப்ப நாய்கள்

நீலாய், ஏப் 27 – கூரியர் எனப்படும் அஞ்சல் பொட்டலங்களில் வரும் போதைப் பொருள் கடத்தலை துடைத்தொழிப்பதற்கு மேலும் 20 மோப்ப நாய்களை சுங்கத்துறை பெறவிருப்பதாக அத்துறையின் துணை இயக்குனர் டத்தோ Sazali Mohamad தெரிவித்தார். இதற்காக Labradors மற்றும் ஜெர்மனின் Shepherd நாய்கள் பெறப்படும். மொத்தம் 1.9 மில்லியன் ரிட்கிட் செலவிலான அந்த வகை நாய்க்குட்டிகள் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இதர நாடுகளிலிருந்து வாங்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 843 கிலோ எடையுள்ள பல்வேறு போதைப் பொருள்கள் 139 நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் அஞ்சலில் அனுப்பப்பட்ட அனைத்து 73 விழுக்காடு போதைப் பொருள் பொட்டலங்களும் பறிமுல் செய்யப்பட்டதாக இன்று Kg Jijan னில் சுங்கத்துறையின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது Sazali Mohamad கூறினார். புதிதாக 20 மோப்ப நாய்களை வாங்குவதன் மூலம் சுங்கத்துறையின் மோப்ப நாய்கள் பிரிவின் பலத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என Sazali தெரிவித்தார். தற்போது எங்களிடம் 20 மோப்ப நாய்கள் இருக்கின்றன. நாட்டிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதை ஆக்கப்பூர்வமாக தடுப்பதற்கு கூடுதல் மோப்ப நாய்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!